top of page
Group 39.png

27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் வெற்றி… வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி!

Author Logo.png

AM Sajith

8/8/24

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி  கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு  எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றுள்ள இலங்கை அணிக்கு பாராட்டுகள்  குவிகின்றன.


இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3  போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள்  கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் களம்  கண்ட இந்திய டி20 கிரிக்கெட் அணி, 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 3 -  0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இதனை தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின. ஒரு நாள்  தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார். இந்திய  அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்க நியமிக்கப்பட்ட  பின்னர் நடைபெறும் முதல் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம்  காணப்பட்டது.

அதற்கு  ஏற்ற வகையில் டி20 போட்டிகளில் இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றினர். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு  இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்த நிலையில்,  இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.


ஒருநாள் போட்டி தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு அளிக்கும்  வகையில் இன்று மூன்றாவது போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்  வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள்  அவிஷ்கா பெர்னாண்டோ 96 ரன்களும், பதும் நிசாங்கா 45 ரன்களும், விக்கெட்  கீப்பர் மெண்டிஸ் 59 ரன்களும் எடுத்தனர்.


50 ஓவர்கள் முடிவில் 7  விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 248 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 249  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாட  தொடங்கியது.


மிகவும் வலிமையான பேட்டிங் லைன் அப்பை இந்தியா கொண்டிருந்ததால் இந்த  போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்  அதற்கு மாற்றமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமான ஆட்டத்தை  வெளிப்படுத்தினர்.


கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், விராட் கோலி 20 ரன்களும், வாஷிங்டன்  சுந்தர் 30 ரன்களும், ரியான் பராக் 15 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள்  ஒற்றை இலக்கத்தில் வெளியேற 26. 1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய  அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து 110 ரன்கள்  வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.


இந்த வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி வரலாற்று சாதனையையும்  ஏற்படுத்தியுள்ளது. அதாவது 27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிரான  ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.


இந்த தொடரில் இலங்கை அணி பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத்  ஜெயசூர்யா நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடரை இலங்கை அணி  கைப்பற்றி இருப்பது பாராட்டை பற்றி வருகிறது.



bottom of page