பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரம் மற்றும் வெளியேற்றப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்காவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
37 வயதான ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கம் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுமதி அளித்தது.
மறைந்த ரூபலின் தந்தை ரஃபிகுல் இஸ்லாம், டாக்கா அதாபோர் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் முன்னாள் சாலை போக்குவரத்து மற்றும் பாலங்கள் அமைச்சர் ஒபைதுல் க்வாடர் உள்பட 156 பேர் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஆகஸ்ட் 5 அன்று, ரூபல் அதாபோரில் ரிங் ரோடு பகுதியில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த பேரணியின் போது, திட்டமிட்ட குற்றவியல் சதியின் காரணமாக, கூட்டத்தில் ஒருவரால் சுட்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ரூபல் மார்பிலும் வயிற்றிலும் காயமடைந்தார்.
அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், ஆகஸ்ட் 7 அன்று அவர் காயங்களால் உயிரிழந்தார்.
பங்களாதேஷில் உள்ள போராட்டக்காரர்கள், முன்னாள் எம்பி ஷாகிப் அல் ஹசனை முன்னாள் தலைவர் ஷேக் ஹசினாவுக்கு 'விசுவாசமாக' இருப்பதாகக் கூறி அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், திருமதி ஹசினா பிரதமர் பதவியை விட்டு விலகவும், நாடு விட்டுச் செல்லவும் வலியுறுத்தப்பட்டார்.
ஜனவரியில், அந்நாளைய ஆளும் அவாமி லீக் கட்சியில் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஷாகிப், தனது நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 67 டெஸ்ட் போட்டிகளில் 4,505 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்பின் பவுலராக, 237 விக்கெட்டுகளுடன் பங்களாதேஷ் கிரிக்கெட் வரலாற்றில் இவர் ஒரு சாதனையாளர் ஆவார்.