top of page
Group 39.png

ஆஸ்திரேலியாவில் மனைவியைக் கொன்ற இலங்கையர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்

Author Logo.png

SM Safeeth

3/9/24

மெல்போர்னில் தனது பிரிந்த மனைவியைக் கொலை செய்ததற்காக, தற்காப்பு என்று வாதிட்ட இலங்கையர், கொலைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.


விக்டோரிய உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு, 47 வயதான தினுஷ் குரேராவை குற்றவாளி என அறிவிக்க மூன்று மணி நேரமே ஆனது. நெலோமி பெரேராவின் மரணம் தொடர்பான வழக்கு ஒரு மாத காலம் நடைபெற்றது.


2022 டிசம்பர் 3 அன்று தனது மனைவியைக் கொன்றதை குரேரா ஒப்புக்கொண்டார், ஆனால் அது தற்காப்புக்காக என்று கூறி, கொலைக் குற்றச்சாட்டை மறுத்தார்.


இந்த தம்பதியின் இரண்டு குழந்தைகளும் தங்கள் தாயின் இறுதித் தருணங்கள் குறித்து உருக்கமான சாட்சியங்களை அளித்தனர். குரேரா ஒரு கோடரியுடன் வந்து, போலீஸை அழைத்தால் வீட்டை எரித்து விடுவதாக மிரட்டியதாக மகள் தெரிவித்தார். தாயின் அலறல் சத்தங்கள் ஒரு பாதுகாப்பு சாதனத்தில் பதிவாகி, நீதிமன்றத்தில் ஒலிக்கவிடப்பட்டது.

நீதிமன்றத்தில், குரேரா தற்காப்புக்காக தனது மனைவியை வெறும் "மூன்று முறை" மட்டுமே அடித்ததாகக் கூறினார். ஆனால், பெரேராவின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.


மூன்று மணி நேரத்தில் முடிவை எடுத்த நீதிபதிகள் குழு, குரேராவை குற்றவாளி என அறிவித்தது. அவர் தற்போது காவலில் உள்ளார், விரைவில் தண்டனை அறிவிக்கப்படும். 

(The Guardian)

bottom of page