top of page
Group 39.png

7500 ஆசிரியர்களுக்கு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி!

Author Logo.png

AM Sajith

5/9/24

அமைச்சரவை சார்பில் 7500 ஆசிரியர்களுக்கு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இது நமது கல்வித்துறையில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முயற்சியாகும்!


இலங்கை அரசு, டிஜிட்டல் உலக மாற்றத்தை தேசிய கல்வி கொள்கையின் முக்கிய அங்கமாக அடையாளப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் துறைகளின் ஆதரவைப் பெறவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்பம், மெக்கட்ரானிக்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகிய துறைகளில் நடைமுறைப் பயிற்சிகளை வழங்குவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான திறன் தொழில்நுட்பக் கல்லூரி (SCOT CAMPUS) வழங்கிய முன்மொழிவின் அடிப்படையில் ஒரு சோதனைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.


அதன்படி, அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த பயிற்சி தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் உள்ளிட்ட STEAM கருத்துடன் தொடர்புடையதாக SCOT CAMPUS மூலம் மூன்று நிலைகளில் வழங்கப்படும்.

எதிர்கால சந்ததியினருக்கு டிஜிட்டல் உலகில் சிறந்து விளங்க தேவையான அடித்தளத்தை அமைக்கும் இந்த முயற்சி, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஓர் முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

bottom of page